ஆர்டிஐ சட்டத்தின் அரசாணை தொகுப்பு விற்பனை

அண்ணா மேலாண்மை நிலை யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா மேலாண்மை நிலையத்தில் கடந்த ஆக.19-ல் ‘தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005’ தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘தகவல் பெறும் உரிமைச்சட்டம் மற்றும் சட்டம் தொடர்பான அரசாணைகளின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் அண்ணா மேலாண்மை நிலையத் தால், ரூ.100-க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த புத்தகங்கள் வேண்டு வோர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் ரூ.100 செலுத்தி புத்தகத்தை நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபால் அல்லது கூரியர் மூலம் பெற விரும்புவோர்,‘ANNA INSTITUTE OF MANAGEMENT, CHENNAI-28’ என்ற பெயரில், ஒரு புத்தகத் துக்கு ரூ.136-க்கான வங்கி வரை வோலை எடுத்து, ‘அண்ணா மேலாண்மை நிலையம், சென்னை-28’ என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment