சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி 

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மேகா லயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதி அடங்கிய கொலீஜியம் மத் திய அரசுக்குப் பரிந்துரை செய் துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாக பதவி வகித்த வி.கே. தஹில் ரமானி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாகவும், மேகாலயா உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஏ.கே.மிட் டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இட மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு செய்துள்ள பரிந்துரையில், "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயாவுக்கும், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்ற பரிந்துரைக்கிறோம். அதேநேரம் தனது இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்யும்படி வி.கே. தஹில் ரமானி விடுத்த கோரிக் கையை எங்களால் ஏற்க முடிய வில்லை" என தெரிவித்துள் ளனர். இந்த பரிந்துரையை மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து, அவர் உத்தரவு பிறப்பித்ததும் முறைப்படியான இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப் படும்.

1958-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சத்தீஸ்கரில் பிறந்த ஏ.கே.மிட்டல், இளங்கலை வணிகவியல் படிப்பை டெல்லியில் முடித்தார். பின்னர், டெல்லி சட்டக் கல்லூரியில் 1980-ல் சட்டப்படிப்பை முடித்து பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். உரிமையியல், மத் திய, மாநில அரசுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர். பஞ்சாப் சட்டப்பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட இவர், வருமான வரித் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 2018-ம் ஆண்டு மே மாதம் பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி யாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த மே மாதம் மேகா லயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல இந்தியாவில் நீதித் துறை வட்டாரத்தில் முக்கியமான, பாரம்பரியமிக்க உயர் நீதிமன்றங் களில் ஒன்றாக கருதப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த வி.கே.தஹில் ரமானியை, மேகா லயா உயர் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருப் பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி களாக பணிபுரிந்து வந்த எஸ்.கே.கவுல், இந்திரா பானர்ஜி ஆகியோர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இதேபோல மேலும் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத் தில் உள்ள நீதிபதி எஸ்.மணிக் குமாரை, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந் துரை செய்துள்ளது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணிபுரிந்த பால் வசந்தகுமார் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதேபோல நீதிபதி ஆர்.சுதா கர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். சென்னையில் இருந்து தெலங்கானா உயர் நீதி மன்றத்துக்கு சென்று, பின்னர் இமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்ட நீதிபதி ஆர்.ராமசுப்பிரமணி யம், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

No comments:

Post a Comment