ரயில்வே ஊழியர்களுக்கான ரயில்வே வாரியம் விளக்கம் 

ரயில்வேயில் ஊழியர்களுக்கான துறைசார்ந்த பதவி உயர்வுக்கான பொது போட்டித் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என ரயில்வே வாரியம் நேற்று விளக்கம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான தேர்வு அறிவிப்புகளை ரயில்வே வாரியம் மண்டலங்கள் வாரியாக சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான, தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், பொது போட்டித் தேர்வை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தத் தேவையில்லை, ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர் பாக ரயில்வே வாரியம் நேற்று அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில்வே மூலம் நடத்தப்படும் துறைரீதியான ரயில்வே பொது போட்டித் தேர்வு வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிகளில் மட்டுமே இருப்பதாக சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிப்பது என்னவெனில், “மேற்கண்ட ரயில்வே பொது போட்டித் தேர்வு வினாத்தாள், அந்தந்த மாநில மற்றும் உள்ளூர் மொழிகளில் தயாரிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘ரயில்வேயில் துறை சார்ந்த போட்டி (ஜிடிசிஇ) தேர்வு களை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித் திருப்பது திமுக போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழ் மொழிக்காக தொடர்ந்து திமுக உறுதியுடன் போராடும்’’ என்றார்.

இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில்வே ஊழியர்கள் பதவி உயர்வு பெற நடத்தப்படும் ஜிடிசிஇ தேர்வுகள் இதுவரையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

இதனால், தெற்கு ரயில்வேயில் இந்தி மொழி பேசும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் பதவி உயர்வுகளைப் பெற முடியும். இந்நிலையில், வாரியம் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவால், இந்தி அல்லாத பிற மொழிகளை சார்ந்தவர்களும் அதிக அளவில் பயன்பெற முடியும்’’ என்றார்.இந்தி அல்லாத பிற மொழிகளை சார்ந்தவர்களும் அதிக அளவில் பயன்பெற முடியும்

No comments:

Post a Comment