உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட்குறிப்பு 

தமிழக பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங் கள், சீருடை, மிதிவண்டி, செருப்பு, மடிக்கணினி உட்பட பல்வேறு விதமான இலவச பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட் குறிப்பு (டைரி) வழங்கவும் கல்வித் துறை முடிவு செய்துள் ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகளை போல அரசு, அரசு உதவி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 56 லட்சம் மாணவர்களுக்கு நாட்குறிப்பு அளிக்கப்பட உள்ளது.

இதன்மூலம் மாணவர்களின் தினசரி வகுப்பறை நடவடிக்கை, கற்றல் திறன் குறித்த தக வல்கள் பெற்றோர்களுக்கு தெரி யப்படுத்தப்படும்.

இது ஆசிரியர், பெற்றோர் களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்த உதவும். முதல் 2 பக்கங்கள் மாண வர்களின் தனிபட்ட விவரங்கள் எழுதிக் கொள்ளலாம். தமிழ், ஆங்கிலத்தில் நாட்குறிப்பு அச் சிடப்படும். இதை தினமும் மாண வர்கள் பள்ளிக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுவர்’’ என்றனர்.

No comments:

Post a Comment