அங்கீகாரம் இல்லா பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

அரசுத் தேர்வுத் துறை இயக்கு நர் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டு மேல்நிலை பொதுத்தேர்வு எழுத முதலாமாண்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல், அந்தப் பள்ளிகள் இணைக்கப்பட வேண்டிய தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளி கள் மாற்றம் குறித்த விவரங்களை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் dgef3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், அந்தந்த மாவட்டங்களில் அங்கீ காரம் பெறப்படாத பள்ளிகளின் விவரத்தை ஆய்வு செய்து, நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 2020 மார்ச் மாதம் நடைபெறும் மேல்நிலை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதன் விவரங்களை சம்மந்தபட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment