மீன்வளப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், சோனியா உள்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மீன்வளர்ப்பு பட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பம் செய்தோம். 31 பேருக்கு மட்டும் நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் அனுப்பவில்லை.

இந்த தேர்வு நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. அதவாது ஆய்வுக்கட்டுரை வெளியிடுவதற்கு மதிப்பெண்கள் அறிவிக்கின்றனர். தேவைக்கேற்ப விதிகளை திடீரென மாற்றியமைக்கின்றனர். நாளை (வியாழக்கிழமை) சிலருக்கு அதிகாரிகள் நேர்காணல் நடத்துகின்றனர். அதில் எங்களையும் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியலையும் ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்வரை உதவிப் பேராசிரியர்கள் பணிநியமனங்களுக்கான இறுதி முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விவாதங்களுக்கு பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் நேர்காணலில் மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை உதவி பேராசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. விசாரணை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment