கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு கட்டணம் வசூலிக்க அரசு முடிவு

தமிழக அரசின் இலவச கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவர் களின் கற்றல் திறனை மேம் படுத்துவதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் ஆக. 26 முதல் தொடங்கப்பட்டது. இந்த சேனல் அரசுகேபிளில் 200-வது அலைவரிசையில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், கல்வி தொலைக் காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கல்வி தொலைக்காட்சி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல் படுத்த கூடுதல் நிதி தேவைப் படு கிறது. எனவே, இதை கட்டண சேனலாக மாற்ற திட்ட மிட்டுள்ளோம்.

விரைவில் அரசு கேபிளில் மிக குறைந்த கட்டணம் உள்ள சேனல்கள் பட்டியலில் கல்வி தொலைக்காட்சியும் இடம்பெறும். மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். கட்டண வசூல் மூலம் கிடைக்கும் தொகை சேனல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்’’ என்றனர்.அரசு கேபிளில் மிக குறைந்த கட்டணம் உள்ள சேனல்கள் பட்டியலில் கல்வி தொலைக்காட்சியும் இடம்பெறும்.

No comments:

Post a Comment