சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளில் காலி பணியிடங்களை உபரி ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் அரசாணை வெளியீடு

அனைத்து வகை சிறுபான்மை, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர் பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும். புதிதாக ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.

மாவட்டத்துக்குள்ளாக இருக்கும் உபரி ஆசிரியர்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படும் சிறுபான்மை பள்ளிகளுக்கு, ஒரே மாவட்டத்துக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம்.

கூடுதலாக ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படும் சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளில், பணி நிரவல் செய்ய, ஒரே மாவட்டத்துக்குள் போதுமான உபரி ஆசிரியர்கள் இல்லாதபோது, வேறு மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்களை பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் பணி நிரவல் செய்யலாம்.

2019 ஆகஸ்டு 1-ந் தேதி அடிப்படையில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில்தான், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் ஆசிரியர்கள், ஒரு சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்தால் அவர்களை உபரி ஆசிரியர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும். உபரியாக உள்ள ஆசிரியர்களை, பணிநிரவல் செய்வதால், அரசிற்கு ஏற்படும் கூடுதல் நிதி இழப்பு தவிர்க்கப்படுகிறது. உபரி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment