ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகத்தின் ஈரோடு மண்ட லத்துக்கு வழங்கப்பட்டுள்ள 22 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக் கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத் தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக் கப்படும். கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விரை வில் மடிக்கணினி வழங்கப்படும்.

9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் ஏதும் இல்லை. மாணவர் களுக்கு விலையில்லா ஷூ வழங்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றார்.

5 comments: