டாஸ்மாக் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டு 500 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கடந்த 18-ல் 9 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. இதை 8,401 பேர் எழுதினர்.

தேர்வு முடிவு www.tasmac.co.in என்ற டாஸ்மாக் இணையத்தளத்தில் நேற்று வெளியானது. தேர்வில் வென்றவர்களுக்கு வரும் 11 முதல் 14-ம் தேதி வரை பூந்தமல்லியை அடுத்த திருமழிசை டாஸ்மாக் ஐஎம்எப்எஸ் டிப்போவில் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment