` 'நச்' விலையில் நான்கு புதிய மாடல்கள்'- ஸ்மார்ட் டி.வி பிரிவைப் பலப்படுத்தும் ஷியோமி!

வந்து சில ஆண்டுகளே ஆனாலும் டி.வி சந்தையில் இப்போதே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கிறது ஷியோமி. இதுவரை இந்தியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான டி.விகள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஷியோமி, 'Make in India' முன்னெடுப்பின்படி தயாரான டி.விகளில் 80 சதவிகிதம் இந்தியாவில் உருவானதுதான் என்றும், இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தது. இந்த வரிசையில் புதிதாக சில டி.விகளை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஷியோமி.இதுவரை வந்திருக்கும் ஷியோமி டி.விகளிலேயே அளவில் பெரியது இதுதான். இதற்குமுன் 55 இன்ச் வரையிலான அளவுகளில் மட்டுமே டி.விகளை விற்றுவந்தது.

இதைவிட, புதிய 65 இன்ச் டி.வியின் மொத்த பரப்பளவு 40 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம். இந்தப் பிரமாண்ட டி.வி 4K UHD 10-bit டிஸ்ப்ளேயுடனும் HDR10 சப்போர்ட்டுடனும் வெளிவருகிறது. நிறங்களைச் சரியாக பளிச்சிடவைக்க, முதல்முறையாக Vivid Picture Engine-ஐ பயன்படுத்துமாம் இது. ஆடியோவைப் பொறுத்தவரை 20W அளவிலான ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கும் இவை, DTS-HD மற்றும் Dolby Audio சப்போர்ட்டுடன் வருகிறது. இது, ஆண்ட்ராய்டு 9.0 மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் PatchWall 2.0 இயங்குதளத்தில் இயங்கும். ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் முதல்முறையாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ சேவைகளுக்கான சப்போர்ட்டும் இந்த டி.வி-யில் இருக்கும்.செப்டம்பர் 29 விற்பனைக்கு வரும் இதன் விலை 54,999 ரூபாய்.

இதே 4X சீரிஸில், இதுபோக இரண்டு டி.விகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஒன்று, 43 இன்ச் மாடல். மற்றொன்று, 50 இன்ச் மாடல். 4K UHD 10-bit டிஸ்ப்ளே கொண்ட இவையும் மேலே 65-இன்ச் மாடலில் குறிப்பிட்டிருந்த அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும்.இவற்றின் விலை: Mi TV 4X 43-inch: 24,999 ரூபாய் | Mi TV 4X 50-inch: 29,999 ரூபாய்.

Mi TV 4A 40-inch
இவற்றுடன், குறைந்த விலையில் மற்றொரு டி.வி-யையும்அறிமுகம் செய்தது ஷியோமி. அதுதான் Mi TV 4A 40-inch மாடல். Full-HD டிஸ்ப்ளே பேனலும், 20W ஸ்பீக்கர்களும் கொண்ட இது, DTS-HD ஆடியோ சப்போர்ட்டுடன் வரும். இதுவும் ஆண்ட்ராய்டு மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் PatchWall இயங்குதளத்தில் இயங்கும்.இதுவும் செப்டம்பர் 29-ம் தேதி விற்பனைக்கு வரும். இதன் விலை 17,999 ரூபாய்.ஏற்கெனவே ஸ்மார்ட் டி.வி விற்பனையில் கெத்து காட்டினாலும் ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள், இந்திய டி.வி சந்தையில் நுழைவது ஷியோமிக்கு சிக்கலாக அமையும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த புதிய டி.விகள் மூலம் எந்தப் போட்டிக்கும் நாங்க ரெடி என தில்லாக சாவல் விட்டிருக்கிறது, ஷியோமி.

No comments:

Post a Comment