அரசு மருத்துவமனைகளில்  ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க இடைக்கால தடை 

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலி யர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம் கலைவாணி, சிவகங்கை சோனியா காந்தி உள்ளிட்ட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலி யர்களை நியமிக்க கடந்த ஜூன் 9-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள் ளன. ஆனால் இந்த தேர்வு முறை யாக நடத்தப்படவில்லை.

ஏற்கெனவே முதலாவதாக வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியல் திடீரென நீக்கப்பட்டு, புதிதாக பட்டியல் வெளியிடப்பட் டது. இந்த தேர்வு நியாயமான முறையில் நடக்கவில்லை. எனவே, தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கோரியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுகுறித்து மருத்துவ தேர்வு வாரியம் 8 வாரங் களுக்குள் பதிலளிக்க உத்தரவிட் டார். அதுவரை அரசு மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படை யில் செவிலியர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்தார்.

No comments:

Post a Comment