மாணவர்களுக்கு தேர்வுத் துறை புதிய அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு 11-ம் வகுப்புக் கும், 2019-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட் டங்கள் மாற்றப்பட்டன. இதனால் பழைய பாடத்திட்டத்தில் படித்து தோல்வி அடைந்த மாணவர் களும் புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மாணவர்கள் அவர்கள் படித்த பழைய பாடத்திட்டத் திலேயே தேர்வுகள் எழுதலாம் என்று பள்ளிக் கல்வித் துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2020-ம் ஆண்டு மார்ச், ஜுன் மாதங்களில் நடத் தப்படும் சிறப்புத் தேர்வுகளில் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வுகளை எழுதிக் கொள்ள லாம். அதன் பின்னர் நடத்தப்படும் தேர்வுகளில் இருந்து புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு கள் நடத்தப்படும். தேர்வு அட்ட வணை விவரங்களை அந்தந்த பள்ளிகள், கல்வித் துறை அலுவ லகங்களில் மாணவர்கள் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment