நீட் பயிற்சி மைய வகுப்புகள் தொடங்குவதில் காலதாமதம்

அரசின் இலவச நீட் பயிற்சி மையங் களில் வகுப்புகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வுக்குப் பின்னரே பயிற்சி வழங்கப்பட உள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத் துவ கனவு சிதையும் சூழல் உருவாகியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார் பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட் டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங் களில், ஸ்பீடு என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இதில் நீட் தேர்வுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. எனினும், அரசின் மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களில் மிகவும் குறைந்த நபர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். சுமார் 42 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றதில் 7 மாணவர் களுக்கே அரசு மருத்துவக் கல் லூரிகளில் சேர இடம் கிடைத்தது. இதனால் அரசின் இலவச பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து இந்த ஆண்டு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்களை செய்ய கல்வித் துறை முடிவு செய்தது. முதல்கட்டமாக பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை 412-ல் இருந்து 506 ஆக அரசு உயர்த் தியது. தொடர்ந்து அரசு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆகஸ்ட் 7-ல் தகுதித்தேர்வு நடத்தி அதன்மூலம் 20 ஆயிரம் பேரை தேர்வு செய்தது. அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தொடங்கும் என் றும் வாரந்தோறும் குறுந்தேர்வு கள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

ஆனால், இன்னும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வில்லை. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரி யர் சிவகுருநாதன் கூறும்போது, ‘‘மருத்துவ கனவுள்ள மாணவர் களுக்கு நீட் தேர்வு பெரும் சுமை யாகிவிட்டது. அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத் துவப் படிப்பு என்பது எட்டாக் கனியாக மாறிவருகிறது. பெரும் பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களால் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்க இயலாது.

இதை உணர்ந்துதான் அரசு சார்பில் மாநிலம் முழுவ தும் 412 இலவச பயிற்சி மையங் கள் தொடங்கப்பட்டன. இந்த முயற்சி மிகவும் வரவேற்கத் தக்கது. ஆனால், ஓராண்டுகூட பயிற்சி வகுப்புகள் ஒழுங்காக நடத் தப்படவில்லை. வகுப்புகள் கால தாமதமாக தொடங்கப்படுவதால் மாணவர்களால் நீட் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடிய வில்லை. எனவே, வகுப்புகளை விரைவாக தொடங்க வேண்டும்’’ என்றார்.

மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறும்போது, ‘‘வரும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இதில் ஜனவரி முதல் மார்ச் வரை பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் தந்தாக வேண் டும்.

எனவே, வெறும் 5 மாதங் களில் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தை அரசே உருவாக்குகிறது. தனியார் பள்ளி களில் படிப்பவர்கள் 2 ஆண்டு கள் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்றும், தேர்வில் தேர்ச்சி பெற சிரமப் படுகிறார்கள். போதிய வசதி இல் லாத காரணத்தால்தான் அரசுப் பள்ளிகளையும், அதன் பயிற்சி மையங்களையும் நம்பி பிள்ளை களை சேர்க்கிறோம். ஆனால், அரசே இப்படி ஏமாற்றுவது வருத்த மாக இருக்கிறது’’ என்றனர்.

இதற்கிடையே காலாண்டுத் தேர்வுக்கு பின்னரே நீட் பயிற்சிகள் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பின் காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும்.

எனவே, செப்டம்பர் இறுதி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி தொடங்க வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசுப் பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் பிள்ளைகளால் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்க இயலாது.

No comments:

Post a Comment