உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அக்டோபர் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு 

அரசு நடுநிலைப் பள்ளிகளில் அக்டோபர் 3-ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அக்.3-ம் தேதி பள்ளிகள் திறக் கப்படும்போது சுமார் 6,800-க்கும் அதிகமான அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் ஆதார் எண் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நடை முறையில் இருக்கும். இதற் கான இறுதிகட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆசிரியர் களுக்கு 12 இலக்க ஆதார் எண் ணில் கடைசி 8 எண்கள் அடையாள மாக வழங்கப்படும். அந்த எண் மற்றும் கைரேகையை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது பயோ மெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு முதல் பதிவு வருகையாகவும், கடைசி பதிவு முடிவாகவும் எடுத்துக் கொள்ளப் படும். நவம்பர் மாதத்தில் தொடக் கப்பள்ளிகளுக்கும் கொண்டு வரப்படும்’’என்றனர்.

No comments:

Post a Comment