ஆயுஷ் படிப்புகள் தரவரிசை பட்டியல் வெளியாவது தாமதம்

தனியார் கல்லூரிகளுக்கு அனு மதி கிடைப்பதில் சிக்கல் நிலவி வருவதால் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது.

இந்திய மருத்துவமுறை படிப் புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ் எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்பு களுக்கு 5 அரசு கல்லூரிகளில் 330 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் போக, மீதம் 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் சுமார் 20 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் இருக்கின்றன.

இவைதவிர தனியார் கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 500 இடங்கள் உள்ளன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள இந்த படிப்பு களுக்கு அரசு இடங்களுக்கு 1,600 பேரும் தனியார் கல்லூரி களின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கு 700 பேரும் விண்ணப் பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டமிட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தனியார் கல் லூரிகளுக்கான அனுமதி கிடைப் பதில் பிரச்சினை நிலவுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக் கை எடுத்து அனுமதி அளித்த பிறகே தரவரிசைப் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment