பின்லாந்து தொழிற்கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்த திட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பின்லாந்து நாட்டின் தொழிற்கல்வி முறையை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பின்லாந்தில் தான் மேற்கொண்ட 7 நாள் கல்விச் சுற்றுலாப் பற்றி அமைச் சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் கூறியாதாவது:

பின்லாந்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், படிக்கும்போதே தொழிற் சாலைகளுக்கு சென்று தொழிற்கல் வியை கற்கின்றனர். இதனால் 18 வயது நிரம்பியதும் பெற்றோரின் துணை யின்றி சுயமாக தங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ள முடிகிறது. இதே போல், தமிழக மாணவர்களுக்கு தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட உள்ளன. இதற்காக நம் ஆசிரியர் களுக்கு 3 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்க அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டிலுள்ள சிறந்த கல்வியாளர்களை தமிழகத்துக்கு நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கல்விகள் குறித்து பயிற்சி தர அனுப்பி வைக்க வும் வேண்டுகோள் வைத்துள்ளோம். பின்லாந்தில் உள்ள தமிழ் நூலகத் துக்கு பழமையான தமிழ் நூல்கள் வேண்டுமென அங்கு வசிக்கும் தமிழர் கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று 15 நாட்களுக்குள் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்த கங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், தனியார் பள்ளிகள் தொடங்கு வதற்கு வரும்காலத்தில் அதிக கட்டுப் பாடுகள் விதிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment