ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு

ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா வுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் 80-க்கும் மேற்பட்ட பால்கோவா தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தனிச்சுவை மிக்க வில்லிபுத்தூர் பால்கோவா வுக்கு புவிசார் குறியீடு கோரி ஸ்ரீ வில்லிபுத்தூர் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் திருநெல்வேலி கால்நடை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி சார்பில் கடந்த 2013-ல் விண்ணப் பிக்கப்பட்டது.

அதில், ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவின் தனிச் சுவை, பாரம்பரியம், கடந்த 1940-ம் ஆண்டு முதல் ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடந்து வரும் பால்கோவா தயாரிப்பு ஆகியவை குறித்த ஆவணங்களும் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. தமிழ்நாடு புவிசார் பதிவு பொருட்களின் ஒருங்கிணைப் பாளரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வில்லிபுத்தூர் பால் கோவாவை வல்லுநர் குழு ஆய்வு செய்தது.

உரிய அங்கீகாரம்

இந்நிலையில் மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிவகம் ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்துள் ளதாக வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி தெரிவித்தார். ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் தங்கள் தொழிலுக்கு உரிய அங்கீ காரமும், சிறப்பும் கிடைத்துள்ள தாகவும், தொழில் மேலும் வளர்ச்சி யடையும் என்று பால்கோவா உற் பத்தியாளர்களும் தொழிலாளர் களும் தெரிவித்தனர்.

புவிசார் குறியீட்டால் பயன்கள்

புவிசார் குறியீடு பெற்றதால் ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா உற்பத்தியாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கும்.

வில்லிபுத்தூரில் மட்டுமே ‘வில்லிபுத்தூர் பால்கோவா’ தயாரிக்க முடியும். மற்ற ஊர்களில் தயாரிக்கப்படும் பால்கோவாவுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா’ என பெயரிட்டு விற்பனை செய்ய முடியாது.

சட்ட நடவடிக்கை

வில்லிபுத்தூரில் தயாரிக் கப்படும் பால்கோவின் தரம் பாது காக்கப்படும். போலி விற்பனை களைத் தடுக்க முடியும். அவ் வாறு விற்பனை செய்வது கண் டறியப்பட்டால் அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

வில்லிபுத்தூர் பால்கோவா விற்பனையும், உற்பத்தியும் அதிகரிக்கும். வாரம் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே பால்கோவா தொழிலாளர்களுக்கு வேலை இருந்து வந்த நிலையில், இனி வாரம் முழுவதும் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

No comments:

Post a Comment