உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, September 4, 2019

வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்கள் வெயிலில் விளையாடுவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் பள்ளிக் கல்வித் துறை அறிவுரை 

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க ஓய்வு நேரத்தில் மாணவர் கள் வெயிலில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப் பதாவது:

இன்றைய நவீன உலகில் மாணவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வம் குறைந்து வருவ துடன், செல்போன், கணினி உள் ளிட்ட சாதனங்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். இத னால் பள்ளி மாணவர்களுக்கு ‘வைட்டமின் டி’ உட்பட ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின் றன. இதை கருத்தில்கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பாட வேளையின்போது ஆசிரியர் கள் விளையாட்டின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி மாணவர் களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்.

ஓய்வு நேரத்தில் சூரியஒளி உடலில் படும்படி உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், விளையாடுதல் உள்ளிட்ட செயல்களை மாணவர் கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டுக் கூட்டத்தை காலை வெயில் நேரத்தில் மைதானத்தில் நடத்துவதுடன், இடைவேளையில் மாணவர்களை மைதானத்தில் உலவ அனு மதிக்க வேண்டும். இதுதவிர விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு அவ் வப்போது போட்டிகள் நடத்த வேண்டும். மேலும், அனைத்து வகையான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படாமல் தடுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதி காரிகள் உரிய அறிவுரைகளை வழங்கி கண்காணித்து தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment