பிஎஃப் வட்டி விகிதம் 8.65%

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19 நிதி ஆண்டுகான பிஎஃப் வட்டி விகிதம் 8.55 இருந்தது. தற் போது அது 8.65 சதவீதமாக உயர்த் தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய தொழிலாளர் துறை அமைச் சர் சந்தோஷ் கங்வார் வெளியிட் டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.

2018-19 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்த, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஒ) மத்திய அறங்காவலர் குழு, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. பண்டிகைகள் வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் 8.55 சதவீத வட்டி 2017-18 ஆண்டின்போது நிர்ணயிக்கப் பட்டது. 2015-16-ம் ஆண்டில் பிஎஃப்க்கான வட்டி 8.80 சதவீதமாக இருந்தது. நிதிப்பற்றாக்குறை கார ணமாக 2016-17-ம் ஆண்டில் அந்த வட்டி விகிதம் 8.65% -மாக குறைக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017-18-ம் ஆண்டில் மீண்டும் அது 8.55%-மாக குறைக்கப்பட்டது. அந்த வட்டி விகித அளவே 2018-19 ஆண்டுக்கானதாகவும் தொடர்ந் தது. இந்நிலையில் தற்போது 2018-19- ம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65%-மாக உயர்த்தப் பட்டுள்ளது. 6 கோடிக்கும் மேற் பட்ட ஊழியர்கள் இந்த வட்டி உயர்வின் பலனை பெறுவர்.

No comments:

Post a Comment