500 காலி பணியிடங்களில் தகுதியானோருக்கு பதவி உயர்வு அரசுக்கு, ‘டாஸ்மாக்’ பணியாளர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில தலைவர் கு.பால்பாண்டியன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு போராட்டம் முன்னெடுத்தபோது, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 500 இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட பணியிடங்களில், டாஸ்மாக் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.

தற்போது 500 இளநிலை உதவியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களில் தற்போது டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட வேண்டும். மேலும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அளித்த உறுதிமொழியின்படி அலுவலக உதவியாளர்கள், பதிவுரு எழுத்தர், ஓட்டுனர், காவலர் பணியிடங்களையும் டாஸ்மாக் பணியாளர்கள் மூலம் விரைந்து நிரப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment