அடுத்த 5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் இடங்கள் ஒரு லட்சமாக உயரும் மத்திய சுகாதார இணை அமைச்சர் தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கான இடங்களின் எண் ணிக்கை ஒரு லட்சமாக உயரும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், தற்போதுள்ள 45 ஆயிரத்தில் இருந்து எம்பிபிஎஸ் சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயரும். அதேபோல, பல்வேறு மருத் துவமனைகள் தரம் உயர்த்தப் பட்டு, தரமான மருத்துவர்கள், கூடுதல் கவனிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்த செலவில் மருத் துவக் கல்வி ஆகியவை வழங்கப் படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானப் பணிக்காக ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சேலம் மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி, மதுரை மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்புக்கு ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, தஞ்சை மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கப் படும். கோமியம் (மாட்டின் சிறுநீர்) விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரு கின்றன. யோகா, சித்தா, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில், புற்று நோயை இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment