உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Monday, September 30, 2019

கடைசி நேரத்தில் நீட் தேர்வு மதிப்பெண் என்ற அறிவிப்பால்  சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை

நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்று கடைசி நேரத்தில் அறிவிக் கப்பட்டதால் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை.

இந்திய மருத்துவ முறை படிப்பு களான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ் எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புக ளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,038 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 500 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் அரசு ஒதுக்கீட்டில் 142 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு, கடைசி நேரத் தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது.

இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக விண்ணப்ப விநியோகம் மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது போன்ற பல்வேறு காரணங்களே இந்த படிப்புகளில் இவ்வளவு இடங்கள் காலியாக இருப்பதற்கு முக்கிய காரணமாக கல்வியாளர்கள் தெரி விக்கின்றனர்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நீட் தேர்வில் 107 மதிப்பெண்கள் வரை எடுத்த அனைவரும் கலந்தாய்வில் பங் கேற்றனர்.

யுனானி படிப்புக்கு உருது மொழி அவசியம் என்பதால், அந்த படிப்புக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. யுனானி படிப்பில்தான் அதிக இடங் கள் காலியாக உள்ளன. காலியாக வுள்ள இடங்களை நிரப்புவதற்காக, நீட் மதிப்பெண் சதவீதத்தை குறைக்கக் கோரி மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்” என்றனர்.

No comments:

Post a Comment