குரூப் 4 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு

குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட உள்ள தாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச் சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பதவி களில் 6,491 காலிப்பணியிடங் களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் செப்டம்பர் 1-ம் தேதி நடந்து முடிந்தது.

மாநிலம் முழுவதும் அமைக் கப்பட்டிருந்த 5,575 மையங்களில் 13.6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து தேர்வு வினாத்தாளுக்கான விடைக் குறிப்பை (கீ ஆன்சர்) நேற்று முன்தினம் டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டது.

இதில் ஏதேனும் ஆட் சேபனை இருந்தால் உரிய ஆதாரங்களுடன் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியே தங்கள் மறுப்பை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப் படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment