அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் முடிக்க வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை பணிகள் மே மாதம் நடத்தப்பட்டன. மறுபுறம் பெரும் பாலான தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துவிடுகின் றன. கடந்த ஆண்டைவிட அதிகம் இதையடுத்து சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள கல்வித் துறை அனுமதி வழங்கியது. அதன்பல னாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல், அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்கள், இடைநின்றவர்கள் உட்பட பல்வேறு காரணங்களால் ஆகஸ்ட் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில் அரசுப் பள்ளிக ளுக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளித்து செப்டம்பர் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க் கையை நடத்திக்கொள்ள கல்வித் துறை அனுமதி தந்துள்ளது. இரண்டாம் பருவம் அதன்பின் காலாண்டு விடுமுறை முடிந்து இரண்டாம் பருவம் தொடங்கிவிடும் என்பதால் புதிய மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக் கொள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment