பதவி உயர்வுடன் பணியாற்றி ஓய்வு பெற்ற  சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பதவி உயர்வுடன் பணியாற்றி ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு மாத சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறி யிருப்பதாவது: சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் செயல்படுத் தப்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின்கீழ் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்னர் பணி நியமனம் பெற்று மேற்பார்வையாளர் நிலை-2, மக ளிர் ஊர் நல அலுவலர், சமூக நல விரிவாக்க அலுவலர், மேற் பார்வையாளர் நிலை-1, ஆசிரியர் களாக பணிபுரிந்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையில் வயது முதிர்வில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 2,266 ஆக உள்ளது. இவர்களுக்கு சிறப்பு ஓய்வூதி யம் வழங்குவதன் மூலம் ஆண் டுக்கு ரூ.5.44 கோடி செலவின மும் ஒவ்வொரு ஆண்டும் தோராய மாக 400 பணியாளர்கள் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து ஆண் டுக்கு ரூ.96 லட்சம் கூடுதல் செலவினமும் ஏற்படும். இருப்பினும், இவர்களின் நிலையை பரிசீலித்து குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் அங்கன் வாடிப் பணியாளர், சத்துணவு பணியாளர்களாக பணிபுரிந்து கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்னர் பதவி உயர்வு பெற்று வயது முதிர்வில் ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெறுவோருக்கு மாத சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment