காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பள்ளிகளுக்கு அக்.2 வரை தொடர் விடுமுறை 

காலாண்டுத் தேர்வு இன்றுடன் முடிவதால் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் அக் டோபர் 2-ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத் தேர்வு களும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக் கான முதல் பருவத்தேர்வு மற் றும் காலாண்டுத் தேர்வு செப்.12-ல் தொடங்கியது.

அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது. தொடர்ந்து காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் இன்று டன் நிறைவடைகின்றன. அதன்பின் நாளை தொடங்கி அக்.2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளது.

விடுமுறை காலத்தில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பும் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment