நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு  புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை சென்னையில் ஏஐசிடிஇ தலைவர் அறிவிப்பு

நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஷ்ரபுத்தே தெரிவித்தார்.

தொழில்நுட்பக்கல்வியின் மேம்பாடு, எதிர்கால செயல்பாடு கள் தொடர்பான விவாதக் கூட்டம் சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சகஷ்ரபுத்தே, தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் மங்கட்ராம் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள், நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பொறியியல் படிப்புகளில் மாண வர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் உட்பட பல்வேறு விஷ யங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.

ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஷ்ரபுத்தே செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. இதை சரி செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிதாக பொறியியல் கல்லூரிகள் தொடங் குவதற்கு அனுமதி வழங்கப் படாது. இதுதவிர பொறியியல் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். இல்லையெ னில் அந்த கல்லூரிகள் பாலி டெக்னிக் கல்லூரிகளாக மாற்றப் படும் அல்லது கல்லூரியை மூடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதன்படி தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மிகக்குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற் றுள்ள 150-க்கும் மேற்பட்ட பொறி யியல் கல்லூரிகளின் நிர்வாகி களை அழைத்துப் பேச முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக உயர்கல்வித் துறை செயலர் மங்கட்ராம் சர்மா கூறும்போது, ‘தமிழகத்தில் மாண வர் சேர்க்கை குறைந்த பொறி யியல் கல்லூரிகளுடன் அடுத்த மாதம் உயர்கல்வித் துறை ஆலோ சனை மேற்கொள்ள இருக்கிறது. இதுதவிர, ஆராய்ச்சியை மேம் படுத்தும் விதமாக அரசு பல் கலைக்கழகங்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பல்கலைக் கழகத்துடன் 10 கல் லூரிகள் இணைக்கப்பட்டு தனி யார் நிறுவனங்களின் இன்றைய தேவைகள் குறித்து ஆலோசிக்கப் படும்’’ என்றார்.

No comments:

Post a Comment