உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

வாரத்துக்கு 2 வகுப்புகள் நடத்த வேண்டும்: அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை

அரசு பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஆரோக்கியமாக இருக்கும் மாணவிகளை மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 1½ மணி நேரம் வீதம் வாரத்துக்கு 2 வகுப்புகள் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் நடத்த வேண்டும். அப்போது உடற்கல்வி, வாழ்வியல் போன்ற சிறப்பு பாடவேளைகளையும் இணைந்தவாறு நடத்தலாம். கராத்தே பயிற்சி அளிப்பவர் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் உடனிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பதுடன், மாணவிகளுக்கு பேரீச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களும் வாங்கிக்கொடுக்க வேண்டும். பயிற்சிக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கி மாணவிகளுக்கு வழங்கலாம். இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் செய்ய உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி இயக்குனரகம், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment