செப்.29-ல் அமேசான் பண்டிகைக்கால விற்பனை

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மிகப் பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை இம்மாதம் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும்.

இதில் ஸ்மார்ட்போன், லேப் டாப், கேமிரா உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், டிவி மற்றும் சமைய லறை சாதனங்கள், ஃபேஷன் உள் ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அதிகபட்ச தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிறுவனங்கள் இதில் தங்களது பொருட்களை பொதுமக் களுக்கு அதிகபட்ச தள்ளுபடி விலையில் அமேசான் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளன.

மிகப் பெரிய பண்டிகைக்கால விற்பனை செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு 11.59-க்கு தொடங்கு கிறது. அமேசான் பிரைம் உறுப் பினர்கள் செப்டம்பர் 28-ம் தேதி பகல் 12 மணியிலிருந்தே வாங்க லாம். வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் 10% உடனடி தள்ளுபடி சலுகையைப் பெறலாம்.

முதல் முறையாக அமேசான் இணையதளத்தில் பொருட்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விழாக்கால கேஷ்பேக் சலுகையாக ரூ.900 கிடைக்கும்.

முன்னணி ஸ்மார்ட்போன்களின் புதிய மாடல்களை 40 சதவீத தள்ளுபடி விலையிலும், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் டிவிக்களை அதிகபட்சம் 75 சதவீத தள்ளுபடி விலையிலும் பெறலாம். ஃபேஷன் பொருட்களுக்கு அதிக பட்சமாக 90 சதவீதம் வரை தள்ளு படி அளிக்கப்படுகிறது. அமேசா னின் பிரத்யேக தயாரிப்புகளான எக்கோ மற்றும் அலெக்சா சாதனங் களை வாங்கி அதிகபட்சம் சேமிக்க முடியும் என நிறுவனம் தெரிவித் துள்ளது.

பண்டிகைக்கால சிறப்பு சலுகை யாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குவதற்கு மாத சுலப தவணை திட்டம் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அமேசான் பே மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளுக்கு அதிகபட்ச ரிவார்டுபுள்ளிகளை அளிக்கும்.

No comments:

Post a Comment