முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 27-ல் தொடக்கம் தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு

முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் பலருக்கு விருப்ப மாவட்டங்களைத் தவிர்த்து தொலைதூரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங் களை நிரப்புவதற்கான அறி விப்பை ஆசிரியர் தேர்வு வாரி யம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 1.85 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த செப்.17-ம் தேதி இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 27 முதல் 29-ம் தேதி வரை போட் டித்தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 17 பாடங்களுக்கும் காலை, மதியம் என 2 இரு வேளைகளும் சேர்த்து 154 மையங் களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இதற்கிடையே முதுநிலை ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியாக நடைபெற உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு பயிற்சித் தேர்வுகள் எழுதுவதற் கான வசதிகள் டிஆர்பி இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விருப்ப மாவட் டங்களைத் தவிர்த்து தேர்வர் களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தேர்வு எழுதவுள்ள பட்டதாரிகள் சிலர் கூறும்போது, ‘‘முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை கணினி வழியாக நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு தேவையான வசதிகளுடன் கூடிய தேர்வு மையங்கள் குறைவாகவே உள்ளன.

அதனால்தான் 1.85 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ள நிலையில் வெறும் 154 மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பா லான தேர்வர்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்ட 3 விருப்ப மாவட்டங்களையும் தவிர்த்து மிகுந்த தொலைவில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேனியைச் சேர்ந்தவருக்கு கரூர் மாவட்டத்திலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருக்கு திருச்சியிலும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தற்போது மனஉளைச்சலில் தவிக் கின்றனர்.

எனவே, தேர்வை சிரம மின்றி எழுத உதவும் வகையில் தேர்வு மையங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றனர்.

இந்நிலையில் டிஆர்பி சார்பில் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்துவித தேர்வு நடைமுறைகளையும் புகாருக்கு இடமளிக்காதபடி சிறந்த முறையில் நடத்தி முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘இதற்குமுன் கணினி ஆசிரியர் தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இறுதிகட்டத்தில் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் பல்வேறு மையங்களில் தேர்வை திட்டமிட்ட நேரத்தில் நடத்துவதில் சிக்கல் உருவானது.

இத்தகைய தொழில்நுட்ப கோளாறுகளைத் தவிர்க்க பிரபல தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தேர்வுக்கான புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கையாள்வதற்கான வழிமுறைகள், தேர்வுக்குரிய வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மேலும், காலவிரயம், வீண் செல வீனம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவே ஓஎம்ஆர் தாள் முறையை மாற்றி கணினிவழியில் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற் கெனவே இதுதொடர்பான வழக்கு கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் தேர்வு நடத்தி முடிக்கப்படும்’’ என்றனர்.காலவிரயம், வீண் செல வீனம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவே ஓஎம்ஆர் தாள் முறையை மாற்றி கணினிவழியில் தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் கவனத்துடன் தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

3 comments: