சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் சேர 2,200 பேர் விண்ணப்பம் தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் சேர 2,200 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டி யல் அடுத்த வாரம் வெளியிடப் படுகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), பாளை யங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை திரு மங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் நாகர்கோவில் அருகே கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங் கள்) என 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப் படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் ஆகும்.

அதுபோல் 20 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 500 இடங்கள் உள்ளன.

இந்திய மருத்துவ முறை படிப்பு களான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம் எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த படிப்புகளில் அரசு மற் றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கான விண்ணப்ப விநியோகம் ww.tnhealth.org, www.tnmedical selection.net ஆகிய இணைய தளங்களில் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவி கள் ஆர்வமாக விண்ணப்பங் களையும், தகவல் தொகுப்பு களையும் பதிவிறக்கம் செய் தனர்.

விண்ணப்பங்களை பதிவிறக் கம் செய்வது நேற்று பிற்பகல் 3 மணியுடனும், பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப் பிப்பது மாலை 5.30 மணியுடனும் முடிவடைந்தன.

தரவரிசை பட்டியல்

மாணவர் சேர்க்கை குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு இடங்களுக்கு 1,600 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 700 விண்ணப்பங் களும் வந்துள்ளன. விண்ணப்பங் கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மாணவ, மாணவிகளுக்கான தர வரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அதன்பின், கலந்தாய்வு தொடங்கும்” என்றனர்.

No comments:

Post a Comment