வேகமாக தரையிறங்கியதால் பாகங்கள் சேதம் லேண்டர் தகவல் தொடர்பை மீட்க 21-ம் தேதி வரை தீவிர முயற்சி

நிலவின் மேற்பரப்பில் வேகமாக சென்று தரையிறங்கியதால் சந்திரயான் லேண்டரின் டிரான்ஸ் பாண்டர்கள், ஆன்டெனா சேதம் அடைந்திருக்கலாம். லேண்டரை தொடர்புகொள்வதற்கான முயற்சி கள் வரும் 21-ம் தேதி வரை தீவிர மாக மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய் வதற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கட்ட சுற் றுப்பாதை மாற்றங்களுக்கு பிறகு, சந்திரயான் விண்கலத்தின் ஆர்பிட் டர் பகுதியில் இருந்து லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி பிரிந்தது. அதன் பிறகு, நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்யும் வகையில் ஆர்பிட்டர் பகுதி 96 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நிலவின் தென் துருவத்தில் லேண்டர் சாதனத்தை மெதுவாக தரையிறக்கும் பணி கடந்த 7-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. நிலவின் தரைப்பரப்பில் இருந்து 2.1 கி.மீ உயரத்தில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக லேண்டர் உட னான தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

திட்டமிட்டபடி நிலவில் லேண்டர் தரையிறங்காவிட்டாலும், ஆர்பிட் டர் வெற்றிகரமாக நிலவை சுற்றி வருவதால் திட்டத்தின் 95% பணிகள் வெற்றி பெற்றிருப் பதாக இஸ்ரோ அறிவித்தது. மேலும், லேண்டரை கண்டறியும் முயற்சிகளையும் தீவிரப்படுத் தியது. தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் தள்ளி, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பது ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் உதவியுடன் கண்டறியப்பட்டது. ஆனால், லேண் டர் உடனான தகவல் தொடர்பை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் இஸ்ரோ நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘சந்திரயான்- 2 ஆர்பிட்டர் மூலம் லேண்டர் இருக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், இதுவரை தகவல் தொடர்பை பெற முடிய வில்லை. லேண்டர் உடனான தொடர்பை மீட்க அனைத்து முயற் சிகளையும் மேற்கொண்டு வருகி றோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானி கள் கூறியதாவது:

எதிர்பார்ப்புக்கு மாறாக, நிலவின் மேற்பரப்பில் வேகமாக சென்று லேண்டர் தரையிறங்கியுள்ளதால், அது சாய்ந்துள்ளது. ஆனால், உடைந்துவிடவில்லை. எனினும், அதில் குறிப்பிட்ட அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. வேகமாக தரையிறங்கியதில் லேண்டரின் டிரான்ஸ்பாண்டர்கள், ஆன்டெனாவில் பழுது ஏற்பட்டி ருக்கலாம் அல்லது சேதம் அடைந் திருக்கலாம் என்று தெரிகிறது. எந்த அளவுக்கு லேண்டர் பாதிப்பு அடைந்துள்ளது என்று ஆய்வு செய்து வருகிறோம். லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

லேண்டரை தொடர்புகொள்வ தற்காக, பெங்களூரு இஸ்ரோ ஆய்வு மையத்தில் உள்ள 32 மீட்டர் விட்டம் உடைய சக்திவாய்ந்த ஆன்டெனா மூலம் பல்வேறு விதமான சிக்னல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூல மாகவும் சிக்னல்கள் அனுப்பப் படுகின்றன. ஆனால், கடந்த 4 நாட்களாக முயற்சித்தும் லேண் டரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

வரும் 21-ம் தேதி வரை நிலவின் தென் துருவத்தில் பகல் வேளை யாக இருக்கும் என்பதால், அடுத்த 10 நாட்களும் தீவிர முயற்சி கள் மேற்கொள்ள திட்டமிடப்பட் டுள்ளது. எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிந்தால்தான் அடுத்தகட்ட திட்டங்களை இன்னும் கவனமாக செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment