ரூ.20-க்கு கால தாமதத்தை தவிர்க்க புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாவட்ட அளவில் அச்சிட்டு வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

திருத்தங்கள் செய்யப்பட்ட மின் னணு குடும்ப அட்டையை ரூ.20 செலுத்தி மாவட்ட அளவிலேயே பெற்றுக்கொள்ளும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு பதிலாக வழங்கப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் மைய அளவில் சென் னையில் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படு கின்றன. இதனால் ஏற்படும் தாம தத்தை தவிர்க்கவும், பயனாளிகள் கோரும் திருத்தங்கள் செய்யப்பட்ட மின்னணு அட்டைகள் வழங்க ஏதுவாகவும், மாவட்ட அளவில் மின்னணு அட்டைகள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

இதன்படி, புதிதாக கோரும் பய னாளிகளுக்கு மாவட்ட அளவில் மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு இலவசமாக வழங்கப்படும். தற் போது நடைமுறையில் இருக்கும் அட்டையில் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால், அத்தகைய திருத்தங்கள் செய்யப்பட்ட மின் னணு குடும்ப அட்டைகளை ரூ.20 செலுத்தி மாவட்ட அளவில் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், சென்னையில் உதவி ஆணையர் அலுவலகங்களிலும் பயனாளிகள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வகையில், திருத்தி அச்சி டப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 பயனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

வேலூர் மாவட்டம் பாச்சூர், கடலூர் மாவட்டம் கொட்டாரம், மதுரை மாவட்டம் இடையபட்டி, நெல்லை மாவட்டம் முத்தூர் ஆகிய இடங்களில் ரூ.12 கோடியே 76 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 14 சேமிப்புக் கிடங்குகளை முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழக உள்துறை சார்பில் சென்னை மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் ரூ.37 கோடியே 94 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 288 காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ.31 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 162 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டிடங்கள், 2 தீயணைப்பு நிலையக் கட்டிடங்கள், 13 குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் தீயணைப்புத் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங் களுக்கு தேர்வு செய்யப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் வழங்கினார்.

சீன நாட்டின் செங்டுவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சர்வதேச காவல், தீயணைப்புத் துறை விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தில் இருந்து பங்கேற்று 9 தங்கம், 16 வெள்ளி, 7 வெண் கலப் பதக்கங்கள் வென்ற 9 காவல் துறையினர், முதல்வரை சந்தித்து பதக்கங்களைக் காண் பித்து வாழ்த்து பெற்றனர்.

No comments:

Post a Comment