2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு .


 • தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமையுள்ள மாணவர்களிடம் இருந்து 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்தவக் கல்லுரிகள் /மருத்துவ நிலையங்களில் மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்க்கான மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 • விண்ணப்பதாரர்கள் http://www.tnhealth.org or www.tnmedicalselection.org இணையதள முகவரியில் உள்நுழைந்து தகவல் தொகுப்பேட்டை படித்து அதில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை தெரிந்து கொண்டபின் விண்ண ப்பப்படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 11.09.2019 காலை 10.00 மணி (முதல் 20.09.2019 மாலை 5.00மணி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 
 • இணைய தள விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் :11.09.2019, 10.00 மு.ப 
 • இணையதள விண்ண ப்ப பதிவிற்கான கடைசி நாள் :20.09.2019,05.00 பி.ப 
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.09.2019, 05:00 பி.ப 
 • விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 (ரூபாய் நானூறு மட்டும்) டெபிட் கார்டு/ கிரடிட் கார்டு மற்றும் இணையதளவங்கி) சேவை மூலமாக செலுத்தலாம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் "The Secretary, selection Committee, Kilpauk, Chennai-10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத் தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு  வரைவோலை மூலமாகவும் செலுத்தலாம். 
 • தாழ்த்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பப்படிவக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். 
 • சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பிரிவுகள் : - 
(1) முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள்
(2) முடநீக்கியல் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு ஒதுக்கீடு 
 • பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்குரிய சிறப்புப் பிரிவு படிவங்களை பூர்த்தி செய்து பொதுப்பிரிவு விண்ணப்பத்துடன் சேர்த்து ஒரே உறையில் அனுப்ப வேண்டும். 
 • ஒவ்வொரு சிறப்புப் பிரிவிற்கும் தனித்தனியாக ரூபாய் 100 வீதம் விண்ணப்பக் கட்டணம் இணையதள வங்கி செலுத்துதல் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10" என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாகவோ செலுத்தலாம். 
 • தனியாக அனுப்பப்படும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான (இணைப்புப் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 
 • மாற்றுத்திறனாளிகள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதிரி) (படிவத்தில் உள்ளவாறு மட்டுமே சான்றிதழைப் பெற்று அனுப்ப வேண்டும். 
 • மேற்காணும் இணைய தளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வப்பொழுது கட்டாயமாக பார்த்து அறிந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
 • பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை அச்செடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்க ண்ட முகவரிக்கு 23.09.2019 மாலை 5.00) மணிக்கு முன்னதாகவே வந்து சேரும்படி அனுப்பிவைக்க வேண்டும். 
செயலாளர்,
தேர்வுக் குழு,
162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600 010.
 • மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப்பின் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தபால்| மூலம் அனுப்புவதில் ஏற்படும் தாமதம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏதேனும் விளக்கம் தேவைப்படின் கீழ்க்காணும் அலைபேசி) | எண்களைத் தொடர்பு கொள்ளவும்: 9884224648/9884224649 9884274745/9884724746 e-mail id : paramedicalsection@gmail.com 

No comments:

Post a Comment