சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு 20-ந் தேதி தொடங்குகிறது

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி 896 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் 72 நகரங்களில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

அதன்பின்பு தேர்வு முடிவு வெளியானபோது முதல் நிலை தேர்வில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 845 பேரும், தமிழகத்தில் மட்டும் 610 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவர்களுக்கான முதன்மை தேர்வு வருகிற 20, 21, 22 மற்றும் 28, 29-ந் தேதி என 5 நாட்கள் நடைபெற இருக்கிறது.

20-ந் தேதி முதல் தாள் (கட்டுரை), 21-ந் தேதி காலை இரண்டாம் தாள் (பொது பாடம்-1), பிற்பகல் மூன்றாம் தாள் (பொது பாடம்-2), 22-ந் தேதி காலை நான்காம் தாள் (பொது பாடம்-3), பிற்பகல் ஐந்தாம் தாள் (பொது பாடம்-4) தேர்வும், 28-ந் தேதி காலை இந்திய மொழி, பிற்பகல் ஆங்கிலம், 29-ந் தேதி காலை ஆறாம் தாள் (விருப்ப பாடம்-1), பிற்பகல் ஏழாம் தாள்(விருப்ப பாடம்-2) தேர்வும் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment