ஆசிரியர், ஆசிரியர் அல்லாத 19,427 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கி அரசாணை

பள்ளிக்கல்வித் துறையில் 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங் களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் தற்காலிக பணியிடங்களுக்கு பணி யிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க் கும் பொருட்டு தற்காலிக பணி யிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என சட்டப்பேரவை யில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, முதல் கட்டமாக 19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை பணிநிரந்தரம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதில் ஆசிரியர் பணியிடங் களும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், கண்காணிப்பாளர் உள் ளிட்ட ஆசிரியர் அல்லாத பணி யிடங்கள் அடங்கும்.

No comments:

Post a Comment