மாநிலக் கல்லூரி முதல்வராக பத்மினி நியமனம்  16 அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள் இடமாற்றம் 

சென்னை மாநில கல்லூரி முதல்வராக, பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பத்மினி நியமிக்கப் பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 16 அரசுக் கல்லூரிகளின் முதல் வர்களை இடமாற்றம் செய்து, உயர்கல்வித் துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டுக் கல்லூரியின் முதல்வராக இருந்த சுமதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியின் முதல்வராகவும், சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராமலட்சுமி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியின் முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள் ளார்.

சத்யமங்கலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் டி.சேகர், பொன் னேரி லோகநாத நாராயணசாமி அரசு கல்லூரி முதல்வராகவும், சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த இ.பத்மினி, சென்னை மாநில கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுதவிர, தமிழகம் முழுவதும் 12 அரசுக் கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர்கள் இடமாற்றம் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.ஜோதி வெங்கடேஸ் வரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில், “மாற்றம் செய்யப்பட்ட முதல்வர்கள் உடனடியாக பணி யில் இருந்து விடுவித்துக் கொண்டு, பொறுப்புகளை அந்தந்த கல்லூரி களின் மூத்த பேராசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கைகளை மின் னஞ்சல் மூலம் கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண் டும்” என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment