சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் ‘கனவு ஆசிரியர் விருது’ அக்.15-க்குள் பரிந்துரைக்க உத்தரவு

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதி யான ஆசிரியர்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கற்பித்தல் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங் கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர் விருது’ வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவ ருக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஒரு மாவட்டத்துக்கு 6 பேர் வீதம் தகுதியானவர் களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். பரிந் துரை செய்யப்படும் ஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் தேசிய நல்லா சிரியர் விருது, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பரி சீலிக்கக் கூடாது.

கல்வித் துறையின் வழிகாட்டு தல்களை பின்பற்றி முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அதிகாரி, மூத்த வட்டார கல்வி அதிகாரி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட தேர்வுக் குழு வானது பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக் கையை புகைப்பட ஆதாரங் களுடன் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment