சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு  ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செப்டம்பர் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு விண் ணப்பிக்க 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லை னில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளை யங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட் டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படு கின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

 இதேபோல் 20 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் இருக்கின்றன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 500 இடங்கள் உள்ளன. இந்திய மருத்துவ முறை படிப்பு களான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப் பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தப் படிப்பு களின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ww.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய சுகாதாரத் துறை இணைய தளங்களில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வ மாக விண்ணப்பங்களையும், தகவல் தொகுப்புகளையும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய் யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. விண்ணப்பங்களை வரும் 13-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் செப். 13-ம் தேதி மாலை 5.30 மணிக் குள்ளாக செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment