பொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள் ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் 12 ஆயிரத்து 75 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் பின் வருமாறு:-

வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக “இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு செயல்படுகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்பு வதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

தற்போது கிளார்க் பணிகளுக்கான 9-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-9) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. மொத்தம் 12 ஆயிரத்து 75 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1379 இடங்கள் உள்ளன. மாநில வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment