10,11,12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்.12-ல் தொடக்கம்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு செப்டம்பர் 12 முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கு கிறது. இந்நிலையில் காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள் அடிப்படை யில் தான் பொதுத்தேர்வு வினாத்தாள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 10, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12-ல் தொடங்கி 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. அனைத்து தேர்வுகளும் 2.30 மணி நேரம் நடைபெறும். 10, 12-ம் வகுப்புக்கு காலையிலும், 11-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்ற றிக்கை வாயிலாக ஏற்கெனவே தேர்வுத் துறை தரப்பில் அனுப்பப் பட்டுள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழு வதும் 26 லட்சம் பேர் எழுத உள்ள னர். இதற்கிடையே காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள் அடிப்படை யில்தான் பொதுத்தேர்வு வினாத் தாள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காலாண்டுத் தேர்வு வினாத்தாள்களை தேர்வுத் துறையே தயாரித்து வழங்குகிறது. எனவே, இந்த வினாத்தாளில் இடம்பெறும் கேள்வி முறைகளை மாணவர்கள் பார்த்து அதற்கேற்ப பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். இதுதவிர 1 முதல் 9-ம் வகுப்புக்கான முதல் பருவத் தேர்வுகளும் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment