ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தியதும், திடீரென 1000ஜிபி இலவச டேட்டாவை அறிவித்த ஏர்டெல்.!

ஜியோ பைருடன் போட்டி போடும் வகையில், ஏர்டெல் நிறுவனம் இலவசமாக 1000ஜிபி டேட்டாவையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளும் அளவில்லாமல் வழங்கப்படுகின்றது. ஜியோ பைபர் ஹோம் பிராட்பேண்ட் திட்டம் வணிக ரீதியாக துவங்குவதற்கு முன் ஏர்டெல் நிறுவனம் இந்த சேவைகளையும் துவங்கியுள்ளது. நாடு முழுவதும் ஜியோ வருவதற்கு முன்பே விரைவாக செயல்படுத்தவும் முனைப்பு காட்டியுள்ளது ஏர்டெல். ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ .799. இது அடிப்படை திட்டமாகும். மாதத்திற்கு 100 ஜிபி இணையத்தை 40 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்குகிறது. மேலும், லோக்கல் எஸ்டிடி அழைப்புகளையும் செய்ய முடியும். இதில், ஏர்டெல் 6 மாத காலத்திற்கு 200 ஜிபி போனஸ் டேட்டாவையும், 100 ஜிபி தரவுக்கு கூடுதலாக வழங்குகிறது. ஏர்டெல் தேங்கியூ திட்டத்தையும் வழங்குகின்றது. நாடு முழுவதும் ஜியோ வருவதற்கு முன்பே விரைவாக செயல்படுத்தவும் முனைப்பு காட்டியுள்ளது ஏர்டெல். ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ .799. இது அடிப்படை திட்டமாகும்.

மாதத்திற்கு 100 ஜிபி இணையத்தை 40 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்குகிறது. மேலும், லோக்கல் எஸ்டிடி அழைப்புகளையும் செய்ய முடியும். இதில், ஏர்டெல் 6 மாத காலத்திற்கு 200 ஜிபி போனஸ் டேட்டாவையும், 100 ஜிபி தரவுக்கு கூடுதலாக வழங்குகிறது. ஏர்டெல் தேங்கியூ திட்டத்தையும் வழங்குகின்றது. 1099 பிளான் சிறப்பு அம்சம் 2வதாக இந்த திட்டம் வழங்கப்படுகின்றது. இதை பொழுதுபோக்குக்கு என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரூ .1099க்கு அதிகபட்சமாக 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதத்திற்கு 300 ஜிபி டேட்டாவை பெறலாம். 6 மாத காலத்திற்கு 500 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கும். ரூ.1099 நன்மைகள் ஏர்டெல் தேங்கி நன்மைகள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா, ஜீ 5 பிரீமியம் உள்ளடக்கத்திற்கான அணுகல், அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடம் , மூன்று மாத நெட்ஃபிக்ஸ் சந்தா, லேண்ட்லைன் தொலைபேசி வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளையும் பெறலாம். ரூ.1599 பிளான் இது மிக உயர்ந்த ஸ்பெக் திட்டம் பிரீமியம்.

இதில், மாதத்திற்கு 600 ஜிபி தரவு, 300 எம்.பி.பி.எஸ் வேகம், 1000 ஜிபி இலவச டேட்டா, ஏர்டெல் தேங்கியூ நன்மைகள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா, ஜீ 5 பிரீமியம் உள்ளடக்கத்திற்கான அணுகல், அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடம், மூன்று மாத நெட்ஃபிக்ஸ் சந்தா, லேண்ட்லைன் தொலைபேசி வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளையும் வழங்கப்படுகின்றது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் : ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்டின் விலை மாதத்திற்கு ரூ .700 வரை இருக்கும் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுத்த திட்டத்தைப் பொறுத்து 100 எம்.பி.பி.எஸ் மற்றும் 1 ஜி.பி.பி.எஸ் இடையே வேகம் இருக்கும். ஒரு வீட்டு தொலைபேசி, ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கான சந்தாக்கள், சிறந்த கட்டணங்கள் ஐ.எஸ்.டி அழைப்பு, ஜியோ மொபைல் இணைப்புகளுக்கு வழங்கப்படும். சில பிராட்பேண்ட் திட்டங்களுடன், ஆண்டுதோறும் பணம் செலுத்தும்போது, ​​பயனர்கள் இலவச எச்டி அல்லது 4 கே டிவியும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

No comments:

Post a Comment