சென்னை ஐஐடி-க்கு உயர் சிறப்பு நிறுவன அந்தஸ்து வளர்ச்சி நிதியாக ரூ.1,000 கோடி கிடைக்கும்

சென்னை ஐஐடி உட்பட நாடு முழுவதும் 5 அரசு கல்வி நிறுவ னங்களுக்கு உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் இக்கல்வி நிறுவனங்களுக்கு வளர்ச்சி நிதியாக தலா ரூ.1,000 கோடி கிடைக்கும்.

நாடு முழுவதுள்ள உயர் கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூசன் ஆஃப் எமினென்ஸ்) என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ல் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வாகும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். அதேபோல், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.

அதன்படி, சென்னை ஐஐடி, கரக்பூர் ஐஐடி, ஐதராபாத் பல் கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல் கலைக்கழகம் ஆகிய கல்வி நிறு வனங்களுக்கு உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட் டுள்ளது. இந்த 5 கல்வி நிறுவ னங்களுக்கும் வளர்ச்சி நிதியாக தலா ரூ.1,000 கோடி வழங்கப்படும். மேலும், கல்வி மற்றும் நிர்வா கத்தில் முழு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படும்.

தமிழகத்தில் அமிர்தா விஷ்வ வித்யா பீடம், வேலூர் விஐடி, டெல்லி ஜாமியா ஹதார்த் பல்கலைக்கழகம், ஒடிசா கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், மொஹாலி பாரதி கல்வி நிறு வனம் ஆகிய 5 தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத் தின்கீழ் அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டாலும் மாநில அரசு நிதி பங்களிப்பை உறுதி செய்த பின்னர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள 5 கல்வி நிறுவனங் களுக்கு வளர்ச்சி நிதியாக தலா ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

No comments:

Post a Comment