பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கான கலந்தாய்வு 10-ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி (செவித்திறன், பேச்சு மற் றும் மொழி, நோய் குறியியல்) உட்பட மருத்துவம் சார்ந்த 17 பட்டப்படிப்புகள் உள்ளன. இப் படிப்புகளில் சுமார் 12 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடை பெறும். நடப்பு கல்வி ஆண்டில் இந்த படிப்புகளில் சேர 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். விண் ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு, தகுதியான 22,155 பேருக் கான தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த படிப்பு களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 10-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12, 13, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். முதல் நாள் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு கலந் தாய்வு நடைபெறுகிறது. பின்னர் பொதுப் பிரிவினருக்கான கலந் தாய்வு தொடங்கி நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான விவரங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment