10, 11, 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வு களும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி யாண்டுத் தேர்வுகளும் நடத்தப் படுகின்றன. அதன்படி அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண் டுக்கான முதல் பருவத்தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வு இன்று (செப்டம்பர் 12) தொடங்கு கிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை பின் பற்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட் டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப். 23-ம் தேதியுடன் முடிவடைகின்றன. அதன்பின் 24-ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும். இந்த விடுமுறை காலத்தில் அரசு பொதுத்தேர்வு எழுத வுள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளும், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment