புதுமணப்பெண்,  கணவரை விட்டுப் பிரிய போட்டித் தேர்வு மட்டுமே காரணம்.

போட்டித் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வந்ததால் கணவரை விட்டு புதுமணப்பெண் பிரிந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மாவட்ட சட்டச் சேவை ஆணையம் (டிஎல்எஸ்ஏ) உள்ளது. இந்த ஆணையமானது, கணவன்-மனைவி பிரச்சினைகள், பெற்றோர் - மகன், மகளுக்கு இடையேயான பல பிரச்சினைகள் தீர ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து ஆணையத்தின் ஆலோசகர் நூருன்னிசா கான் கூறும்போது, “எங்கள் ஆணையத் துக்கு பல்வேறு விதமான பிரச் சினைகளுடன் கணவன்-மனைவி வருகிறார்கள். சமீபத்தில் கான் என்பவர் தனது மனைவியுடன் வந்தார்.

இவர் பிஎச்.டி. படித்தவர். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் யுபிஎஸ்சி உள் ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வு களுக்காக இவர் தயாராகியும் வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவசர அவசரமாக கானுக்கு திருமணம் நடந்துள்ளது. மேலும் கானின் பெற்றோருக்கு இவர் ஒரே மகன் ஆவார். இதனிடையே கல்யாணமான சில நாட்களிலேயே கானின் மனைவி கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட் டார். கணவர் எவ்வளவோ சமாதா னப்படுத்தியும் அவர் வரவில்லை.விவாகரத்து கேட்டு அந்தப் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றம் எங்களி டம் கான், அவரது மனைவியை கவுன்சிலிங்குக்காக அனுப்பி யுள்ளது. அப்போது விசாரித்தபோது கான், எப்போதும் போட்டித் தேர்வுகளிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளார். மனைவியின் பக்கம் அவரது கவனம் திரும்பவே யில்லை. தன்னிடத்தில் அன்பு செலுத்தாததால் அந்தப் பெண் அவரை பிரிந்து சென்றுள்ளார். தன்னை தனது கணவர் புறக்கணிக்கிறார் என்றும், தான் ஒருத்தி இருப்பதையே அவர் மறந்துவிட்டார் என்றும் கவுன்சிலிங்கின்போது அந்த பெண் தெரிவித்தார்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாணவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற எல்லைக்குள்ளேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி தன்னைப் புறக்கணிப்பதாக அந்தப் பெண் தனது விவாகரத்து மனுவில் தெரிவித்துள்ளார். கணவன் எப்போதும் யுபிஎஸ்சி தேர்வுகள் மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வு தொடர்பானவற்றுக்குள்ளேயே நின்றுகொண்டிருக்கிறார். அதைத் தாண்டி தன்னை ஒரு பொருட்டாக அவர் மதிப்பதேயில்லை என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.. கணவர் கானிடம் பேசும்போது தனது லட்சியங்களுக்கு இடையூ றாக இருக்கும் என்று திருமணத்தில் விருப்பம் இல்லாமலேயே அவர் இருந்துள்ளார். வயதான நிலையில் உள்ள அவரது பெற்றோர்கள் உடல்நிலை குன்றியதனால் அவர்கள் வற்புறுத்தலின்பேரில் அவர் இந்த திருமணத்தை செய்துகொண்டதாக தெரியவந்தது இப்போது அவர்களைச் சேர்த்து வைக்க நாங்கள் ஆலோசனை களை வழங்கி வருகிறோம்” என்றார். - பிடிஐ

No comments:

Post a Comment