திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு

உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள நல்லாம்பட்டி, வேடபட்டி, பாறைப் பட்டி, அனுமந்த நகர், யாகப்பன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குடிசைத் தொழிலாகப் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 150 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பூட்டுத் தொழில் தற்போது சிறு தொழிலாக விரிவடைந்துள்ளது. இப்பகுதியில் தாழ்ப்பாள் போட்டு பூட்டப்படும் மாங்காய் பூட்டு, கதவு பூட்டு, டிரிக்கர் பூட்டு, ஷட்டர் பூட்டு, பெல் பூட்டு, பாட்னர் ஷிப் பூட்டு (ஒரு பூட்டுக்கு 4 சாவி இருக்கும். நான்கு பேரும் ஆளுக்கு ஒரு சாவி வைத்திருப்பர். நான்கு பேரும் ஒன்று சேர்ந்தால்தான் இந்த பூட்டைத் திறக்க முடியும்), இரண்டு சாவி பூட்டு (ஒரு சாவியில் பூட்டிவிட்டு மீண்டும் இரண்டாவது சாவியிலும் பூட்டவேண்டும்) எனப் பலவகையான பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன. திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள் வேறு ஊருக்குச் சென்றால் திண் டுக்கல் பூட்டு வாங்கி வாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு இதன் புகழ் பரவியது. அதற்குக் காரணம் திருடர்களால் திறக்க முடியாத பூட்டாக திண்டுக்கல் பூட்டு இருந்ததுதான். தற்போது புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் இதற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத் துள்ளது. இந்தியாவிலேயே பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய் யப்படுவது செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை மட்டுமே. சிறி யதும், பெரியதுமாக பட்டையான கோடுகள் அல்லது கட்டங்கள் நிறைந்த டிசைனும் இதன் சிறப்பு. இந்த சேலைகளில் டபுள் சைடு பார் டர் இருக்கும். வேறு எந்த சேலையி லும் இல்லாத 48 இஞ்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம் இருக்கும். சமீப காலமாக சிங்கிள் சைடு பார்டர் சேலைகளையும் தயாரிக்கின்றனர். 60-க்கு 60 பருத்தி நூல் செட்டிநாட்டு காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு 60-க்கு 60 பருத்தி நூலையே பயன்படுத்துகின்றனர். அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் இவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாயங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் டபுள் ஷேடு கிடைக்கிறது. புடவை யும் பளிச்சென்று காண்போரைக் கவர்ந்திழுக்கும். சாயம் போகாது. இந்த சேலைகளை 200 ஆண்டு களுக்கும் மேலாக காரைக்குடி பகுதியில் தேவாங்கர் இனத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி மூலம் நெசவு செய்கின்றனர். நகரத்தாருக்காக தயாரிக்கப் பட்ட இந்த சேலைகள் தற்போது உலகமெங்கும் பிரபலமாக உள் ளன. இத்தகைய சிறப்புவாய்ந்த செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment