உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, August 22, 2019

உதகமண்டலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான (COMBINED ENGINEERING SERVICE EXAMINATION) எழுத்துத் தேர்வினை 10.08.2019 அன்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்தியது. உதகமண்டலம் மாவட்டத்தில் பெய்துவந்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தேர்வு நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலும் அம்மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் உதகமண்டல மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும் இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வானது வரும் 25.08.2019 அன்று அதே தேர்வு மையத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை, உதகை தேர்வுமைய விண்ணப்பதாரர்கள் மட்டும், தேர்வாணைய இணைய தளத்திலிருந்து www.tnpscexams.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment