உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை  விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது 

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன் லைனில் நேற்று தொடங்கியது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளா கத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல் வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் 330 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 20 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் கல்லூரிகளில் நிர் வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 500 இடங்கள் உள்ளன.

இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ் எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப் பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பு களின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் ww.tnhealth.org, www. tnmedicalselection.net ஆகிய சுகா தாரத் துறை இணையதளங்களில் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப் பங்களையும், தகவல் தொகுப்பு களையும் பதிவிறக்கம் செய்து வரு கின்றனர். செப்டம்பர் 13-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தை தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 13-ம் மாலை 5.30 மணிக்கு செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், அலுவலகம், அறிவிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment